காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம்-2024 மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் (JICA)உதவியுடன், வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு வகுப்பை கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. ஏரிமலை கிராமத்தில் சூழல் மேம்பாட்டுக் குழுவின் 15 குழந்தைகளுக்கு இப்பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் திட்டங்கள் செயலாகப் பிரிவு இயக்குனர் அன்பரசு ராமன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் பாலக்கோடு வனச்சரக அலுவலர் திரு.P. நடராஜன் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு, புத்தகப்பை, நோட்டுப்புத்தகங்கள், அபாகஸ் கிட், உணவுப்பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்வில், வனவர் திரு.சி. சுரேஷ், வனப் பாதுகாவலர் திருமதி D.சுதா, கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் முதன்மை இயக்குனர் பொம்மிடி முருகேசன் மற்றும் ஏரிமலை கிராம சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள், ஊர்ப்பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவர் D.S.சசிக்குமார், செயலாளர் சுசீந்திரன் நன்றி கூறினார்.

