Type Here to Get Search Results !

இந்திய அளவில் சிறந்த சர்க்கரை ஆலையாக கோபாலபுரம் சுப்ரமணிய சிவா ஆலை தேர்வு.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, கோபாலபுரம், தருமபுரி மாவட்டம், சர்க்கரைதுறை இயக்குநர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்பட்டு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் (NFCSF) 2022-23-ம் ஆண்டு அரவைப்பருவத்தில் அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறனுக்காக முதல் இடத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருது 10.08.2024 அன்று மாண்புமிகு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களின் பொற்கரங்களால் பெறப்பட்டது. 

இவ்விருதினை ஆலையின் செயலாட்சியர் திருமதி.R.பிரியா, தலைமை இரசாயனர் மற்றும் கணக்கு அலுவலர் ஆகியோர் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (14.08.2024) தலைமை செயலகத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து இவ்விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.


இந்நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் செல்வி.அபூர்வா, இ.ஆ.ப, சர்க்கரைத்துறை இயக்குநர் திரு.த.அன்பழகன் இ.ஆ.ப, சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் திருமதி.R.பிரியா ஆகியோர் உடனிருந்தனர். சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேசிய அளவில் விருது பெற்று சாதனை படைத்துள்ளது நமது மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies