இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்ட கலெக்டர் திருமதி.கி.சாந்தி, அவர்கள் இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு மாநில கிளைக்கு, நிர்வாக குழு அமைப்பதற்கான தேர்தல் நடத்தும் பொருட்டு, மாவட்ட கிளைகளுக்கான தேர்தலினை உடனடியாக நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் விவரங்களை, இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழ்நாடு மாநில கிளைக்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளைக்கு நிர்வாக தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் இதர பதவிகளுக்கான தேர்தல், வருகின்ற 02.09.2024 - தேதியன்று பிற்பகல் 3.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும், தங்களுடைய ஆயுள் உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் தவறாமல் கலந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpg)