தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளியில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய சேவாசமிதி, சேவாபாரதி ரத்தவங்கி, பாலக்கோடு அரிமா சங்கம், தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடைப்பெற்ற இரத்ததான முகாமினை மருத்துவர்.மோகனப்பிரியா அவர்கள் தலைமை ஏற்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதில் ஶ்ரீவித்யாமந்திர் கல்விநிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜூ, கே.ஜி.எம். குழும நிறுவனர் மருத்துவர் பாலகிருஷ்ணன், அரிமா சங்கத் தலைவர் கேசவராஜ், லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இளைஞர்கள் தன்னார்வலர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் முத்து, அரிமா சரவணன், தொழிலதிபர்கள் செந்தில், பாலாஜி, சீனிவாசன், கிரிதர், ராஜ்குமார், பிரித்வி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

