ஆய்வில் தயாரிப்பு நிறுவன சுற்றுப்புறம் மற்றும் உபகரணங்கள், மூலப்பொருள்கள், அடைக்கப்பட்ட குளிர்பான பெட்பாட்டில்களின் லேபில்கள், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண், உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்கள் உரிய முறையில் அச்சிடப்பட்டுள்ளனவா, தயாரித்த குளிர்பானங்கள் இருப்பு, பராமரிப்பு, உபரி கழிவுகள் முறையாக வெளியேற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டது. மேலும் குளிர்பானங்கள் தரம் அறிய குளிர்பானங்கள் உணவு மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் காரிமங்கலத்தில் தர்மபுரி ரோடு, மொரப்பூர் ரோடு, உச்சம்பட்டி,பேருந்து நிலைய பகுதிகளில் மற்றும் அனுமந்தபுரம் சாலைகளில் உள்ள குளிர்பானம் மொத்த விற்பனை நிலையங்கள், சிறு பெட்டி கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவை பார்வையிட்டு காலாவதி தன்மை லேபிள் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மொத்த விற்பனை நிலையங்களிலும் ஒரு சில குளிர்பானங்கள் மாதிரி சேகரிக்கப்பட்டது. குளிர்பானங்கள் குடிநீர்கேன்கள் நேரடி வெயில் படாத வகையில் வைத்து விற்பனை செய்ய விழிப்புணர்வு செய்யப்பட்டது.
ஆய்வில் பேருந்து நிலைய பகுதியில் இரண்டு கடைகளில் மட்டும் உரிய விவரங்கள் அச்சிடாத லோக்கல் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்து அழித்து அப்புறப்படுத்தி மேற்படி இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் நியமன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ. ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்படி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தின் விபரங்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.

