தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனை மற்றும் கெயில் நிறுவனம் சார்பில் இலவச இரத்ததான முகாம் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட சுகாதார நல பணிகள் மற்றும் மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 10Oக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்.
இம்முகாமில் மருந்தாளுநர் முத்துசாமி, மருத்துவர்கள், செவிலியர்கள், கெயில் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

