தருமபுரி நல்லானூர் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78ஆவது சுதந்திர தின விழாவையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு இரத்ததானம் கொடை வழங்கினர்.
இந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த், முதல்வர் முனைவர் பரஞ்சோதி, குருதி வங்கி மருத்துவர் கன்யா, பிரபு ஆகியோர் தலைமை தாங்கினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஸ் குமார் ராஜா, பெருமாள் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.

