நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூட்டப்பட்டி சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்குழுவில் மாநில தீர்மானக் குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன் முன்னிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு 100 ரூபாய் நாணயங்களை வெளியிட உள்ள ஒன்றிய அரசிற்க்கு நன்றி தெரிவித்தும், பேரூராட்சி, கிராம பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்ற கோரியும், அரூர், பாலக்கோட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க வேண்டும் என்றும் குறித்தும், கலைஞரின் வெண்கல திருஉருவ சிலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொண்டர்கள், இப்போதிலிருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை வென்றது போல, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும், வெற்றி பெற்று தர்மபுரிமாவட்டம், திமுக கோட்டை என நிருபிப்போம் என பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், அன்பழகன், வக்கில் கோபால், முனியப்பன் பேரூர் கழக செயலாளர்கள் பி.கே.முரளி, சீனிவாசன், வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பிணர் பி.சி.ஆர்.மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

