ஆய்வில் பொன்னேரி பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையுடன் இணைந்த மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கடை உரிமையாளர்க்கும் ரூ.25000 உடனடி அபராதம் விதித்து கடையை 15 தினங்கள் திறக்க கூடாது என எச்சரிக்கை செய்து நோட்டீஸ் வழங்கி கடை மூடப்பட்டது.
மேலும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பேக்கரி, உணவகங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பறிமுதல் செய்யப்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி என 3 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய்.2000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
உடன் ஆய்வில் 2 உணவகங்கள் மற்றும் சிப்ஸ் தயாரிப்பு என மூன்று கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்திய சமையல் எண்ணெயை பறிமுதல் செய்து, மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய்.ஆயிரம் உடனடி அபராதம் விதித்து, ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (RUCO- REUSED COOKING OIL) மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய் டீலரிடம் கொடுத்து ரூபாய் 45 முதல் 50 வரை ஒரு லிட்டருக்கு பெற்று கொள்ள வழிவகை உள்ளதாக விழிப்புணர்வு செய்யப்பட்டு,பிரசுரம் கடையில் ஒட்டப்பட்டது. ஒரு உணவகத்தில் உரிய விவரங்கள் இல்லாத 20 லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் அப்புறப்படுத்தி மேற்படி கடை உரிமையாளருக்கு ரூபாய்.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வில் உணவுப் பொருட்கள் தரம் அறிய ஊறுகாய், உள்ளூர் குளிர்பானங்கள் மற்றும் சமைத்த, வறுத்த இறைச்சி உணவுகளில் செயற்கை நிறம் ஏற்றி உள்ளனவா என அறிய சமைத்த இறைச்சி உணவு மற்றும் சிக்கன் வறுவல் உணவு மாதிரி சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கை முடிவு அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நியமன அலுவலர் தெரிவித்தார்.
ஆய்வின் போது பைசுஅள்ளி அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம், பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, உணவுப்பொருட்கள் காலாவதி தன்மை, மூலப் பொருட்கள், சமைத்த உணவு பராமரிப்பு, உணவு மாதிரி எடுத்து வைத்தல், தன் சுத்தம் சுற்றுப்புற சுத்தம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

