Type Here to Get Search Results !

காரிமங்கலம்‌ சாவடியூர் கிராமத்தில் குடிபோதையில் அண்ணனை கொடுவாளால் வெட்டி கொன்று புதைத்த தம்பி கைது.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சாவடியூர்  கிராமத்தை சேர்ந்த மோகன் (வயது 38) கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இவரது உடன் பிறந்த தம்பி உடன்பிறந்த தம்பி ரகு (வயது.35) ரகுவிற்க்கு திருமணமாகி தீபா என்ற  மனைவி  மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
மோகன், ரகு இருவரும் இரவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.


இந்நிலையில் 28 ம் தேதி நேற்று இரவு வழக்கம் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து சாவடியூர் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர்.


அப்போது மோகன் தம்பி ரகுவிடம்  நீ மட்டும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கிறாய், எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லை என்றும் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரகு அருகில் இருந்த கொடுவாளால் அண்ணண் மோகனின் கழுத்தில் வெட்டியுள்ளார்.


இதில் இரத்த வெள்ளத்தில் மோகன் துடிதுடித்து இறந்துள்ளார். அண்ணன் இறந்துவிட்டதை அறிந்த ரகு  அருகே உள்ள குப்பை கழிவு கொட்டப்படும் குழியில் மோகனின் உடலை   புதைத்து விட்டு, வீட்டிற்க்கு சென்று மனைவி தீபாவிடம்  நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக தீபா காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும் ரகுவை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


குடிபோதையில் அண்ணனையே தம்பி வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies