Type Here to Get Search Results !

கிட்டம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு.


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டி கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி  மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். 

இத்திருவிழாவானது கடந்த 23ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றி கங்கனம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று அம்மனுக்கு கூல் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முக்கிய நாளான இன்று அதிகாலையில்  ஸ்ரீ மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


மேலும் பெண் பக்தர்கள் மாவிளக்குதட்டு,  கரகம் எடுத்து   மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக  சென்று கோவிலை  அடைந்து வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்தனர். 


இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை  ஊர் கவுண்டர்கள,  மந்திரிகவுண்டர்கள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies