பாலக்கோடு, ஆக.25 :
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றியச் செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றியச் செயலாளர் முனுசாமி, ஒன்றியப் பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உணவருந்தினர்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
.gif)

.jpg)