Type Here to Get Search Results !

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 ஜூன் - 04 அன்று செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு என்னும் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு  வாக்கு என்னும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை காவல் கண்காணிப்பாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பணித்துறை, மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல், வாக்கு என்னும் பணி ஜூன் - 04 அன்று செட்டிகரை வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனித்தனியே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும், CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் அறை, வாக்கு என்னும் அறையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக 14 மேசைகள், ஒவ்வொரு மேசைகளுக்கும் தனித்தனியாக CCTV கேமரா அமைக்கப்பட்டுள்ளதையும், தபால் வாக்கு என்னும் அறையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும், வாக்கு என்னும் மையங்களில் மின்சார வசதி, மின்விளக்குகள், மின்விசிறி, குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், 


பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மீடியா சென்டர் (media centre) அமைய உள்ள இடத்தினையும், ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை விவரத்தை அறிவிக்க ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதையும், வேட்பாளர் மற்றும்  அவரது முதன்மை முகவரிடம் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது தொடர்பு அறையில் (Public Communication Room) அமர்வதற்கான அறை, தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரோட்டர்கள்,  தீயனைப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழு அமரும் அறை ஆகிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூடுதலாக செய்ய வேண்டிய பணிகளை 31.05.2024 வெள்ளிக்கிழமைக்குள் விரைவாக முடிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 


மேலும், தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 ஜூன் - 04 அன்று நடைபெறுவதை முன்னிட்டு செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி அரங்கில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதின் இப்ராகிம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், பொதுப்பணித்துறை செயற்பெறியாளர் திரு.சிவக்குமார், உதவி செயற்பெறியாளர் திரு.ஆனந்தவேல், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) திரு.வெங்கடேசன், திரு.அ.சோக்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள்,  பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies