தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (47)என்பவர் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே இப்பகுதியில் கனமழை மற்றும் புயல் காற்று வீசியதில் வீட்டின் அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து 2 பசு மாடுகளின் மேல் விழுந்ததில் இரண்டு பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். 2 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பசுமாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
.gif)


