Type Here to Get Search Results !

பாலக்கோடு கொலசனஹள்ளியில் ஊர்நல அலுவலராக பதவி உயர்வு பெற்றவருக்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகூர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளராக  பணியாற்றி வந்தவர், ஜெயகாஞ்சனா, இவர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஊர்நல அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பதவி உயர்வு பெற்று செல்லும் ஜெயகாஞ்சனா,  அவர்களுக்கு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கொலசனஹள்ளி அங்கன்வாடி மையத்தில் பாராட்டு விழா நடைப்பெற்றது.


இவ்விழாவிற்க்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பாலக்கோடு வட்டக் கிளைத் தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மேனாள் மாவட்டத் தலைவர் என்.மணி, சங்க நிர்வாகிகள் செந்தமிழ்செல்வி, சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார்.


கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் கலந்து கொண்டு பதவி உயர்வு பெற்று செல்லும் ஜெயகாஞ்சனா அவர்களின் சிறப்பான பணிகளையும் , சேவைகளையும் பாராட்டி தொடர்ந்து தனது பணிகளின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என  வாழ்த்து தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின்  மாநில துணைப் பொதுச் செயலாளர் , சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் மாநில தலைவர் மாதப்பன், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், மாவட்ட பிரச்சார செயலாளர் கோவிந்தன்சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அரசு தொழிற்பயிற்சி  நிலைய இளநிலை  பயிற்சி அலுவலர் மோகன், அரூர் வட்டக் கிளைத் தலைவர் பிரகாசம், வட்டார மேற்பார்வையாளர் கலா, சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் சங்கீதா, திவ்யா, விடுதிப் பணியாளர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்கள், ஆசிரியர்கள் தெய்வானை, மாதம்மாள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஊர்நல அலுவலராக பதவி உயர்வு பெற்று  ஜெயகாஞ்சனா அவர்களை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சி முடிவில் சங்க நிர்வாகி  சுஜாதா நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies