Type Here to Get Search Results !

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை வழங்கிய பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ஜெகநாதன்


பெரியார் பல்கலைக்கழகம் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை முனைவர் ஜெகநாதன் துணைவேந்தர் பெரியார் பல்கலைக்கழகம் அவர் கரங்களால் வழங்கப்பட்டது.

தர்மபுரி அடுத்த பைசுஹள்யில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது  இம் முகாமில் இயற்பியல் கணிதம் மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்களுக்கு  அவர்களுக்கான ஆணையை முனைவர் ஜெகநாதன் பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் அவர்களால் வழங்கப்பட்டது துணைவேந்தர் கூறுகையில் தருமபுரி நாமக்கல்லில் உள்ள பெண்கள் உயர்கல்விக்கு சென்று வேலைவாய்ப்பை பெற வேண்டும் தெரிவித்தார். 


இந்நிகழ்வில் முனைவர் கார்த்திகேயன் துறை தலைவர் மேலாண்மை துறை அவர்கள் வரவேற்பு உரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார் இதற்கு முன்னதாக முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு தலைமை உரை நிகழ்த்தினார் முனைவர் திருமூர்த்தி தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்பு பெரியார் பல்கலைக்கழகம் சேலம் அவர்கள் முன்னிலை வகித்தார். 


முனைவர் ஆர்டி சுரேஷ் உதவி பேராசிரியர் மேலாண்மை துறை அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் முனைவர் செல்வவிநாயகம் மற்றும் முனைவர் தஷ்நிம் முனைவர் முகாமத் நபி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies