பாலக்கோடு, மே.26:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரேசன் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சுஜாதா தம்பதியரின் மகள் நிவேதிதா (21), தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்து வருவதாக கூறி பேருந்தில் இருந்து இறங்கி சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மகளை கண்டுபிடித்து தரக்கோரி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன கல்லூரி மாணவி நிவேதிதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

