
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரிமங்கலத்தில் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் புதன் அன்று உணவு பாதுகாப்பு துறை மற்றும் அனைத்து வணிகர் சங்கம் ஏற்பாட்டின் பேரில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது எனவும் காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் காரிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் உள்ள உணவு சார்ந்த வணிகம் புரியும் அனைத்து வகையான உணவு தயாரிப்பாளர்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், உணவகங்கள், மளிகை கடைகள், தேநீர், பெட்டி கடைகள் மற்றும் குளிர்பான, குடிநீர் விற்பனை நிலையங்கள், விநியோகிப்பாளர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள் தயாரிப்பாளர்கள், பால் குளிரூட்டும் நிலையங்கள், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர்கள் நடமாடும் உணவு வணிகர்கள், பாஸ்ட் புட், துரித உணவு கடைகள், பானிபூரி, காய்கறி, பழங்கள் விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை உணவு கடைகள், அரசு மற்றும் தனியார் உணவு விடுதிகள், திரையரங்கு கேண்டீன்கள் உள்ளிட்ட அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் மட்டும் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். இதுவரை உணவு பாதுகாப்பு உரிமம் பெறாதவர்கள், புதுப்பிக்காதவர்கள், புதுப்பிக்க வேண்டியவர்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முகாம் புதன் கிழமை காலை 11 மணி முதல் மாலை மூன்று மணி வரை முகாம் மொரப்பூர் சாலை ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
உணவு பாதுகாப்பு உரிமம் பெற தேவையான ஆவணங்கள் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார், அடையாள அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் இவற்றில் ஏதோ ஒரு ஒன்றின் நகல் மேலும் வணிகம் புரியும் இடத்திற்கான அக்ரிமெண்ட் அல்லது பஞ்சாயத்து ரசீது நகல் எடுத்து வரவேண்டும். வர இயலாதவர்கள் தாங்களாகவே https://foscos.fssai.gov.in உரிய விவரங்களை பதிவேற்றி பின்பு ஆன்லைன் வழியாக தொகை செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கடந்த சில தினங்களாக காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பொன்னேரி, பொம்மள்ளி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி வருகிறார்.
காரிமங்கலம் அனைத்து வணிகர் சங்கமும் பேரூராட்சி, நகர பகுதிகள், சந்தை, மற்றும் பைபாஸ் சாலைகளில் ஒலிபெருக்கி வழியாக ஆட்டோவில் முகாம் விழிப்புணர்வும், பிரசுரங்களும் வழங்கி வருகின்றனர்.