தருமபுரி – மார்ச் 19:
தருமபுரி மாவட்ட அனைத்து நாயுடுகள் மகாஜன சங்கம் சார்பில் 29வது யுகாதி திருவிழா முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையினை வகித்தார்.
நிகழ்ச்சியில், 2025ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் பாராட்டு வழங்கப்பட்டது. மேலும், நாயுடு திருமண தகவல் மையத்தின் துவக்க விழாவும் நடைபெற்றது.
- அரசு மேற்கொள்ளும் சாதிவாரி கணக்கெடுப்பில், தமிழ் மொழிக்கு அடுத்ததாக தெலுங்கு மொழி பேசும் நாயுடு சமூகத்தினர் தங்களின் தாய்மொழி தெலுங்கு என பதிவு செய்ய வேண்டும் என கூட்டத்தில் உறுதி எடுக்கப்பட்டது.
- மேலும், யுகாதி திருவிழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் தாலுக்கா அளவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சித்ரா மெடிக்கல்ஸ், D.G. வெங்கடேசன், பொருளாளர் ஆர். ராஜா, கௌரவத் தலைவர் கே. பாண்டுரங்கன், தலைமை ஆலோசகர் ஆர். வெங்கடேஷ் பாபு, கலைமகள் பள்ளி ஆர். நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)