Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக மையத்தில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கு நடைபெற்றது.


தருமபுரி - மார்ச் 13:


தருமபுரியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் (NSD) முன்னிட்டு “மனித உடலுடன் அயனியாக்கும் கதிர்வீச்சின் தொடர்பு: இயற்பியல் செயல்முறைகள் முதல் உயிரியல் விளைவுகள் வரை” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு 13.03.2026 அன்று நடைபெற்றது.


இந்த கருத்தரங்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக மருத்துவ இயற்பியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் சி.எஸ். சுரேகா கலந்து கொண்டு சிறப்பு கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மைய இயக்குநரும், இயற்பியல் துறைத் தலைவருமான பேராசிரியர் மா. செல்வபாண்டியன் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும் பெண்கள் அடிப்படை அறிவியலைப் பாடமாக எடுத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வளர்ச்சி அடையும் என அவர் குறிப்பிட்டார். முன்னதாக முனைவர் பிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.


இந்த ஒருநாள் கருத்தரங்கில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கருத்தரங்கின் போது புகழ்பெற்ற பேச்சாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்பாளர்களின் பல்வேறு சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. மேலும் மாணவர்கள் தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி, கட்டுரைகள் சமர்ப்பித்து, வினாடி வினா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் அழைப்பாளரை ஆராய்ச்சி மாணவி நிவேதா அறிமுகப்படுத்தினார். ஆராய்ச்சி மாணவி கோகுலப்ரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கௌரவ ஆசிரியர் செந்தில் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக கௌரவ ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies