பாப்பாரப்பட்டி புதிய பஸ்நிலையம் அருகில் அதிமுக சார்பில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து பாப்பாரப்பட்டி காவல்நிலையம் முதல் கிளை நூலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக விவசாய பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எம்.கே.வேலுமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் பேரூராட்சி தலைவர் அ.பாபு, நகர செயலாளர் ஆர்.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பி.கே.குட்டி, முன்னாள் ஒன்றிய சேர்மேன் ஆர்.மதியழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ராஜி, ஒன்றிய கவுன்சிலர் தீபா சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் டி.முனுசாமி, சாவித்திரிபாபு, அதிமுக நிர்வாகிகள் இளங்கோ, கார்த்தி, நடராஜன், வஜ்ஜிரம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.
.gif)

