மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தருமபுரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தகவல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (12.03.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையேற்று, தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும், எண்ணற்ற பல வளர்ச்சி திட்டங்களையும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.
அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து, ஒவ்வொரு நபரும் அரசின் ஒரு திட்டங்களிலாவது பயன்பெறுகின்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும். அதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். திட்ட செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து அத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும். திட்டப்பயனாளிகள் தகுதியான நபர்களாக இருப்பதையும், அவர்கள் பயன்பெறுவதையும் உறுதி செய்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும், அனைத்து நலத்திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றிட அனைத்து அரசு அலுவலர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும். எதிர்வருகின்ற கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில், குடிநீர் விநியோக பணிகளை நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒரே சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை விரைந்து முடித்தும், ஊராட்சிகளில் ஏற்கனவே செயல்பட்டுவரும் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, மின்மோட்டார்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வட்டார அளவிலான கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் ISO தரத்தில் பணியில் சிறந்து விளங்கிய 3 அங்கன்வாடி மையங்களுக்கான ISO தரச்சான்றிதழ்களை சத்துணவு மைய அமைப்பாளர்களிடம் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் வழங்கினார். முன்னதாக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில், கலைஞரின் நகரப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அறிவுசார் மையத்தினையும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பூலாம்பட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தினையும், பைசுஅள்ளியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தினையும், காரிமங்கலம் நியாய விலைக்கடையினையும் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடையில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்ததோடு, திட்டப்பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. அ.சிவக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

