Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்  ஸ்ரீ‌திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில்  உணவ வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா  அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமிற்க்கு காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்புரை ஆற்றினார்.


இம்முகாமிற்க்கு காரிமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் மாது, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கணேசன் , மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் மன்சூர் இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் செல்வி, வணிகர் சங்க நிர்வாகிகள்  அருள், சந்திரன்,  மாவட்ட தொழில் மைய வள அலுவலர்  பரணிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாவட்ட நியமன அலுவலர் பேசுகையில். மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்தல் வேண்டும்.  சான்றிதழை நுகர்வோர் காணும் வகையில் நிறுவனத்தில் மாட்டி வைக்க வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். தன் சுத்தம் சுற்றுப்புற சுத்தம், சுகாதாரம் பின்பற்றுதல் வேண்டும். 


உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் துரித உணவு உணவகங்கள், கோபி மஞ்சூரி, வறுத்த மீன், சில்லி சிக்கன், இறைச்சி கடைகள் மேலும்  ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பான விற்பனை நிலையங்களில் தேவையற்ற செயற்கை நிறமூட்டிகளை சேர்த்தல் உபயோகப்படுத்துதலை  அறவே தவிர்க்கப்படுதல் வேண்டும். ஆய்வில் கண்டறியப்பட்டால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆய்வறிக்கை முடிவின் அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்தார்.  


முகாமில் காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள உணவு சார்ந்த வணிகம் புரியும்    நூற்றுக்கும்  மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு  உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான  புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கப்பட்டது, இவை ஏழு தினங்களுக்குள் உரிய வகையில் பதிவேற்றம் செய்து முறையான ஆய்வுக்கு பின் உரிமம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


முகாமிற்கான ஏற்பாடுகளை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் அனைத்து வணிகர் சங்கம் இணைந்து செய்திருந்தனர். முகாமில் காரிமங்கலம்,பொம்மள்ளி, அனுமந்தபுரம், முக்குளம் பெரியாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வணிகர்கள் திரளாக பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies