காரிமங்கலம் - மார்ச். 18:
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம், காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பி. பழனியப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து விரிவாக விளக்கி பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்.பி., அவைத்தலைவர் மனோகரன், தேர்தல் பார்வையாளர் அரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், அன்பழகன், முனியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும், பேரூர் செயலாளர்கள் பி.கே. முரளி, சீனிவாசன், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், ஏ.வி. குமார், ராஜபார்ட்ரங்கதுரை, இளைஞர் அணி நிர்வாகிகள் மகேஷ், ஹரிபிரசாத், ஐ.டி.விங் நிர்வாகி பரணி உள்ளிட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளை வலுப்படுத்தி, தொகுதிகளில் தீவிர பிரச்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)