தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்கும் போட்டி நடைபெற்றது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய போட்டிகளான பாட்டு போட்டி, நடன போட்டி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மாணவிகள் பாராம்பரிய உடையான பாவாடை தாவணி மற்றும் சேலைகள் அணிந்தும், பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கல்லூரி தாளாளர் சக்திகைலாசம் கலந்து கொண்டு கரும்பு, மஞ்சள், பூ உள்ளிட்ட பொங்கல் படையில் வைத்து பூஜை செய்து கல்லூரி மாணவிகளுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.