தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம் சார்பாக இன்று பறையப்பட்டி புதூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் உலக வெப்ப மயமாதலை தடுக்கவும் பெருகி வரும் மாசு கட்டுப்பாட்டினை மேம்படுத்தவும் கலாசார போட்டிகள் திட்ட இயக்குநர் பத்ஹீ முகமதுநசீர் அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்றது.
இதில் காலை உணவு சமையலர்கள், சுயஉதவி குழு சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கோலபோட்டி, கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார இயக்க மேலாளர் சே.அறிவழகன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உடன் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி துணை தலைவர் மலர்கொடி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.