தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீசாருக்கு பொம்ம அள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைப்பெற்று வருவதாக இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து போலீசார் இன்று பொம்மஅள்ளி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர், அப்போது பொம்மஅள்ளி பிரிவு சாலையில் போலீசாரை கண்டதும் ஓட முயன்ற வரை பிடித்து விசாரித்ததில் சுருளிஅள்ளி கிராமத்தை சேர்ந்த பூபதி (வயது. 24) என்பதும் கஞ்சா போதையில் இருந்தது, தெரிய வந்தது, அவரை சோதனை செய்ததில் 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொம்மஅள்ளி பிரிவு சாலையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது. 50 கிராம் கஞ்சா பறிமுதல்
ஜனவரி 02, 2024
0
Tags