நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஜக்க சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய குழு உறுப்பிணர் முனிராஜ், காரிமங்கலம் அதிமுக மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தன், பாலக்கோடு ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீரசாசனுர் கிராமத்திற்க்கு நிழற்கூடம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 15 நிதிக்குழு மானிய திட்டத்தில் 5இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர், கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து திட்ட பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்மா பாசறை நிர்வாகிகள் மாதராஜ், சீங்கேரிகோபால், வெள்ளிசந்தை கிளை செயலாளர் சங்கர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ரஞ்சித், ராஜா, முல்லை பிரகாஷ், வசந்தாகங்காதரன், பாரத் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.