தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தமிழக முழுவதும் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூ உள்ளிட்ட சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகமெங்கும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதையடுத்து அரூர் கச்சேரி மேட்டில் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூ இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன இதில் மத்தியசங்க பொறுப்பாளர் ஜீவானந்தம் செயலாளர் ஏ.ஜோதி பொருளாளர் மாரியப்பன் கிளை பொறுப்பாளர்கள் ரமேஷ் கனகராஜ் இளையராஜா நாகராஜ் ராஜசேகர் பன்னீர் வடிவேல் திம்மராயன் கோபு பாரதியார் கிருபாகரன் கிருஷ்ணமூர்த்தி ராஜஜெயம் பத்மநாபன் தம்பிதுரை சீனிவாசன் பிரகாசம் சிஐடியூ ரகுபதி கோவிந்தன் டி டி எஸ் எப் மாநிலத் துணைத் தலைவர் பழனி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கம் தமிழ்செல்வன் மயில் அலுவலர்கள் சங்கம் முருகன் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.