தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், முத்துகவுண்டர்தெரு, மேல்தெரு, தீர்த்தகிரி நகர், கல்கூட அள்ளி, மைதீன்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் செங்கரும்பு, சர்க்கரை, அரிசி, வேட்டி சேலை மற்றும் ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் MMM.முருகன் செந்தில் பேரூராட்சி துனைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, ரவி, வார்டு கவுன்சிலர்கள் சரவணன், மோகன், ரூஹித், சிவசங்கரி, பிரியாகுமார் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.