தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முணைவர் கீதா தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு தர்மபுரி நெல்லிக்கனி அறக்கட்டளை நிறுவனர் விஜயராஜேந்திரன், பெங்களுரு ரோட்டரி கிளப் நிர்வாகி ஜெயராமன், மும்பையை சேர்ந்த வேதாந்தா பவுண்டேசன் நிர்வாகி தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அரசு பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைய வழிதொடர்போடு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிய முறையில் கல்வி கற்கும் வகையில் கதைகள், கட்டுரைகள், நீதிக்கதைகள், பொது கேள்விகள் மற்றும் தற்போதைய பாடத்திட்டம் அனைத்தையும் ஆசிரியர்களின் உதவி இல்லாமலே படிக்கும் வகையில், கல்வி 40 என்ற தமிழக அரச அரசு திட்டத்தின் மூலம் வேதாந்தா பவுண்டேசன் அரசுப் பள்ளி கல்லூரிகளை தத்து எடுத்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கணினிகளை இணைய வசதியுடன் வழங்கி வருகிறது,
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு பள்ளி கல்லூரிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தி மாணவ மாணவிகள் கல்வி கற்க ஊக்கபடுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20 கணினிகளை இணைய வதியுடன் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.