தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் 8.1.2024 முதல் 10. 1.2024 வரை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பூகான அள்ளியில் மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு பஞ்சாயத்து துணை தலைவர் திரு.பிரபு, பள்ளி மேலாண்மை குழு தலைவி தங்கமணி, தன்னார்வலர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மா.அசோக்குமார் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சு.பிரேமா மற்றும் வ.பிரியதாருணி ஆகியோர் இந்த மூன்று நாட்களும் பணிகளை ஒருங்கிணைத்தார்கள்.