Type Here to Get Search Results !

குண்டல்பட்டி நெடுஞ்சாலையில் முட்டை கம்பெனி அருகில் மொபட் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் இரவு காவலர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கள்ளுக்கடை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது.36) இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் இண்டூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இண்டூர்  செல்வதற்காக தனது மொபட்டில் காரிமங்கலத்திலிருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார், தர்மபுரி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் குண்டல்பட்டி  முட்டை கம்பெனி அருகே மொபட் மீது மோதியதில் செந்தில்குமார் பலத்த காயமடைந்தார்.


அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த மதிகோன்பாளையம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies