தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாரண்டஅள்ளி அடுத்த குண்டுபள்ளம் கிராமத்தில் உள்ள புளியமரத்தடியில் மொபட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது, அவரை பிடித்து விசாரித்ததில் வெளாங்காடு கிராமத்தை சேர்ந்த பொன்முடி (வயது. 40 ) என்பதும் அரசு மது பானங்களை மொபட்டில் எடுத்து சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது, அவரிடமிருந்து 4 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 31 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபட்டையும் பறிமுதல் செய்த அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் பொன்முடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
.gif)

