அதன் தொடர்ச்சியாக காரிமங்கலத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல்துறை சிறப்பு நிலை காவலர் சிவா ஆகியோர் கூட்டாக இணைந்து காரிமங்கலத்தில், மொரப்பூர் மெயின் ரோடு, தர்மபுரிரோடு, கிருஷ்ணகிரி ரோடு, பேருந்து நிலைய பகுதி , பைபாஸ் ரோடு , ஹைவே ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மட்டுமல்லாது பள்ளி அருகில் உள்ள மளிகை கடைகள், பீடா கடைகள், பெட்டி கடைகள் என சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சில கடைகளில் இருந்து காலாவதியான குளிர்பானங்கள், உரிய விபரங்கள் அச்சிடாத குளிர்பானங்கள், தின்பண்டபாக்கெட்டுகள், பறிமுதல் முதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும் ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்த இரண்டு கடைக்காரர்கள் மற்றும் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் உபயோகித்த உணவக உரிமையாளர் ஆகிய மூவருக்கும் நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா அவர்கள் உத்தரவின்படி தலா ஆயிரம் ரூபாய் வீதம் 3ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.