பென்னாகரத்தில் சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு பாமக மாநில கௌரவ தலைவர் ஜிகே மணி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் உள்ள சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு இன்று புதன்கிழமை அவரது 67-வது நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில கெளரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே மணி சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞரணி நிர்வாகி சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், பென்னாகரம் நகர தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.