பாலக்கோடு, ஆகஸ்ட் 11, 2025 | ஆடி 25 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகப்பேறு மருத்துவமனையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜஹாங்கீர் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் பாபு, கிளை நிர்வாகிகள் அமிர்ஜான், இர்பான், அஸ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் குருதி பிரிவு மருத்துவர் கன்யா, பாலக்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர் சசிரேகா, மருந்தாளுநர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்மாதிரி இளைஞர்கள், மதுபோதை மற்றும் புகையிலை பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதுடன், இரத்ததானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இம்முகாமில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.