Type Here to Get Search Results !

பெரியாம்பட்டி காமராஜர் சிலை அருகே மூன்று சக்கர வாகனம் மோதி முதியவர் படுகாயம்.

IMG SRC : SEVEN.EDU.VN

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த காசி கொள்ளன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராஜி (வயது.70) கூலி தொழிலாளியான இவர் பெரியாம்பட்டியில் உள்ள டீ கடையில் டீ  குடித்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்,


பெரியாம்பட்டி காமராஜர் சிலை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற குப்பை அள்ளி செல்லும் 3 சக்கர பேட்டரி வாகனம் பெரியவர் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies