மொரப்பூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை கொலை செய்தவழக்கில் நடத்துநருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நிமாண்டியூரை சேர்ந்தவர் செல்வராஜ் (46) இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார் திருமணமான இவருக்கு குழந்தைகள் உள்ளன. இவர் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் வாசுதேவன் இவரது மனைவி தனசேகரி(29) இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி இருந்தார் வாசுதேவன் தனசேகரி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன வாசுதேவன் லாரி ஓட்ட சென்றதால் வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவார் இந்நிலையில் நடத்துனர் செல்வராஜ் தனசேகரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி செல்வராஜ் தனசேகரியின் வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது தனசேகரி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் தனசேகரியிடம் யாரிடம் பேசுகிறார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் தனசேகரியின் கழுத்தை சேலையால் இருக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் கைது செய்தனர் இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கு இறுதி விசாரணை வந்தது நீதிபதி சையத்பர்கத்துல்லா தனசேகரியை கொலை செய்த செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)

