Type Here to Get Search Results !

மாட்லாம்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்.


தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட காவல்துறையும், உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை கண்காணித்து  உரிய நடவடிக்கை  சுகாதாரத் துறை செயலர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இணைந்த எட்டுக்குழுக்கள்  ஏற்படுத்தப்பட்டு தொடர் ஆய்வு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. 

மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா  தலைமையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி உள்ள சுப்ரமணி என்பவரின் மளிகை கடையில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


இந்த ஆய்வின் போது   காரிமங்கலம் பாலக்கோடு  ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சபி ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies