Type Here to Get Search Results !

தார் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை செய்து பணியை துவக்கி வைத்த தருமபுரி MLA.


தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஊராட்சி, சின்னகாம்பட்டி –  தாசன்கொட்டாய் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் ரூபாய் 9.98 இலட்சம் மதிப்பீட்டில் 10,000லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கப்பட்டது. இப்பணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். 


அதனை தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் அதகப்பாடி ஊராட்சி, அதகப்பாடி முதல் சின்னதடங்கம் வழியாக சிவசுப்ரமணியம் நகர் வரை ரூபாய் 87 இலட்சம் மதிப்பீட்டில் 2 கி.மீ தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில், உதவி பொறியாளர் துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கந்தம்மாள்வடிவேல், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, நிர்வாகிகள் விஜியன், சக்திவேல், மாயகிருஷ்ணன், அருணாச்சலம், மாரியப்பன், கர்ணன், இராமன், பத்மநாபன், மற்றும்  ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies