Type Here to Get Search Results !

காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கோடி 25 லட்சம் மதிப்பிட்டில் கூடுதல் கட்டிடம் கட்டவதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் MLA தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று நபார்டு திட்டத்தின் மூலம் 2 கோடி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று தளங்களை கொண்ட 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. 

இதில் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies