Type Here to Get Search Results !

நக்கல்பட்டி கிழங்கு மில் எதிரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து நேற்றிரவு அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டைக்கு புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. தருமபுரி அடுத்த நக்கல்பட்டி கிழங்குமில் எதிரில் சென்று கொண்டிருந்தபோது  கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


விடியற்காலை ரோந்து பணிக்கு சென்ற மதிகோன்பாளையம் போலீசார் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது கண்டு உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வேறு சரக்கு லாரி கொண்டு வரப்பட்டு அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை ஏற்றி தேன்கனிகோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர் குறித்து எந்த விபரமும் தெரியாததால் விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies