Type Here to Get Search Results !

காரிமங்கலம் கடைத்தெருவில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் நீண்டகாலமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தன, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக உதவி கோட்ட பொறியாளர் கவிதா முன்னிலையில் பாலக்கோடு நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் நவீன்குமார், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் கொண்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காரிமங்கலம் -  மொரப்பூர் சாலை,  கிருஷ்ணகிரி - காரிமங்கலம் சாலை, தர்மபுரி  - காரிமங்கலம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை  ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். 

மேலும் இனி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும்  நெடுஞ் சாலைகளை ஆக்கிரமிப்புகள் செய்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை  அமைப்பவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies