Type Here to Get Search Results !

அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரூர் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார்


அரூரில் நடைபெற்ற அதிமுக  பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களை அவதூராகவும் கண்ணிய குறைவாகவும் பேசியதாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரூர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. 


தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் ஆலோசனையின் பேரில் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டி.சந்திரசேகர், தலைமையில் திமுகவனர் அரூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் முல்லைரவி, அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபால், திமுக மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், வழக்கறிஞர்கள் சி.எம்.சேகர், சக்திவேல், ராஜ்குமார், நிர்வாகிகள் சிட்டிபாபு, மோகன், சூர்யாவெங்கடேசன், ரகுராமன், கார்த்தி, கட்ரைபழனி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies