காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி புகார் பெட்டி திறக்க முடியாமல் தினறிய அதிகாரிகளால் கோபமான உதயநிதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி புகார் பெட்டி திறக்க முடியாமல் தினறிய அதிகாரிகளால் கோபமான உதயநிதி.


 தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திமுக இளைஞர்கள் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில்  கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 


ஆய்வின் போது நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து குறைகளை கேட்டறிந்தவர் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியை திறக்க  அதிகாரிகளிடம் கூறினார். அப்போது புகார் பெட்டி பல மாதங்களாக திறக்காமல் பூட்டியே கிடந்ததால் திறக்க முடியாமல் அதிகாரிகள் தினறினர்.


அப்போது கோபமான அமைச்சர் உதயநிதி  புகார் பெட்டியை கழட்டி மேசையின் மீது வைத்து எண்ணெய் ஊற்றி திறக்க கூறினார். அப்போதும் திறக்க முடியாததால் தனது உதவியாளரை அழைத்து புகார் பெட்டியின் பூட்டை உடைத்து திறக்க கூறினார். ஒரு வழியாக புகார் பெட்டி திறக்கபட்டது.


இதனால் அங்கிருந்த ஊழியர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். புகார் பெட்டி வைத்து உடனடியாக மக்கள் பிரச்சனையை தீர்ப்போம் என்றார்கள், தற்போது புகார் பெட்டியை திறப்பதே பெரும் பிரச்சனையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad