பென்னாகரம், ஜன. 28:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நான்கு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த திட்டத்தை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்களின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பேருந்து நிலையத்தில் அமைக்கப்படவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் கோபுர மின்விளக்குகள் அமைப்பதன் மூலம் இரவு நேர பாதுகாப்பும், ஒளியமைப்பும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். திமுக பென்னாகரம் மத்திய ஒன்றிய செயலாளர் பச்சியப்பன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் முரளி, முன்னாள் ஒன்றிய மாணவரணி நஞ்சப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஷானு, சீனிவாசன், நிர்வாகிகள் குமார், சங்கரன், மாதையன், துரை, சுப்பிரமணி, காவிரியப்பன், ஒப்பந்ததாரர் சங்கர் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும், பணிகள் தரமான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
.gif)

.jpg)