தருமபுரி – ஜனவரி 29:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 77-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, மாணவ-மாணவிகளிடம் தேசப்பற்று மற்றும் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, பள்ளியில் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு சிறப்பு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் வெங்கட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெ. துரை தனுஷ் ஸ்ரீ, மண்டல அளவில் நடைபெற்ற 2 நிமிட கின்னஸ் உலக சாதனை புத்தக பாடல் போட்டியில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டும் வகையில், பள்ளியின் சார்பில் மாணவிக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பாளை. அன்பழகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் இளந்துறை, துணைத் தலைவர் பூங்கொடி, மேலாண்மை குழு உறுப்பினர் சிவகுரு, சமூக கல்வி ஆர்வலர் சரவணகுமார் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததுடன், மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழா முழுவதும் உற்சாகமும் தேசப்பற்றும் நிறைந்த சூழலில் நடைபெற்றது.
.gif)

.jpg)