தருமபுரி, ஜன.28:
தருமபுரி வள்ளல் ஐடையப்ப செட்டியார் டிரஸ்ட் சார்பில், சமூக சேவையில் முக்கிய பங்களிப்பு ஆற்றிய T.A.M. சுப்பிரமணிய செட்டியார் அவர்களின் 47-வது ஆண்டு நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தருமபுரி கடை வீதியில் அமைந்துள்ள வள்ளல் ஐடையப்ப செட்டியார் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், தருமபுரி கூட்டுறவு நகர வங்கி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது சேவைகளையும் சமூகப் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவு தினத்தை முன்னிட்டு, வள்ளல் ஐடையப்ப செட்டியார் டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்வில் வள்ளல் ஐடையப்ப செட்டியார் டிரஸ்ட் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியன், டிரஸ்ட் நிர்வாகிகள், தருமபுரி கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள், வாணியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.gif)

.jpg)