Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெறும் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் - பொதுமக்கள் வணிகர்கள் கடும் அவதி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி  மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி புதிய தரைத்தளம் அமைக்கும் பணி துவங்கப்பட்ட நிலையில் தற்போது புறநகர் பேருந்து நிலைய  சீரமைப்பு பணிகள் தரைத்தளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது. ஜல்லி கற்களை கொண்டு தற்போது வரை  சமன் செய்யப்பட்ட நிலையில் உள்ளது, மற்றும் பேருந்து நிலைய சீரமைப்பு  பணிகள் ஆரம்பகட்ட பணிகள் முடிந்த நிலையில் நகர பேருந்து நிலைய முழு சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் ஜல்லி கற்கள் கொட்டி நீண்ட நாட்கள் கடந்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .

மேலும் ஆளும் கட்சி ஒப்பந்ததாரரின் வேலை சுணக்கத்தால் தினந்தோறும் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றன.


இதனால்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை தினறி வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர்  துரித நடவடிக்கை மேற்கொண்டு  பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies